Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

நாளை முதல் தமிழகம் – யாழ்., பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்.

யாழ்ப்பாணம் மற்றும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் வரையிலான பயணிகள் படகு சேவை

நாளை முதல் தமிழகம் – யாழ்., பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் வரையிலான பயணிகள் படகு சேவை நாளை (13.05.2024) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையிலான 60 கடல் மைல்கள் (110 கிமீ) வரை பயணிக்கும் படகுச் சேவைக்கான வரிகளை உள்ளடக்கிய ஒரு வழி கட்டணமாக 17,641 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவின் 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், இலங்கையில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு 16,445 கட்டணமான நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பொருந்தக்கூடிய வரிகள் மற்றும் பிற கட்டணங்களுக்கான செலவுகளை ஒரு வருட காலத்திற்கு மாதாந்தம் 25 மில்லியனுக்கும் அதிகமான தொகையை ஏற்க இந்தியா முடிவு செய்துள்ளது.

மேலும் பயணி ஒருவர் 60 கிலோ கிராம் நிறையுடைய பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையில் ஈடுபடுத்த அந்தமானில் தயாரிக்கப்பட்ட பெர்ரி படகு கடந்த 10 ஆம் திகதி நாகை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. அதில் ஒரே நேரத்தில்160 பேர் வரை பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காங்கேசன்துறை துறைமுகத்தை புதுப்பிக்க இந்திய அரசாங்கம் 63.65 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானிய உதவியாக வழங்கியிருந்தது.

சுமார் நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, கடந்த ஆண்டு ஒக்டோபரில் இந்திய-இலங்கை படகுச் சேவை தொடங்கப்பட்டது, எனினும், மோசமான வானிலை காரணமாக அந்தச் சேவை நிறுத்தப்பட்டனது.

கடந்த 1983 ஆம் ஆண்டு வரை மன்னார் மற்றும் தூத்துக்குடி இடையே படகு சேவை இயக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.