மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கா, தயாராகும் நேட்டோ !
அமெரிக்கா அதன் அனு ஆயுதங்களை நவீனப்படுத்துகிறது
.png)
ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம்!
நேட்டோ கூட்டணி அதன் அணுஆயுத தளவாடங்களை அதிகரிக்க திட்டமிடவில்லை, மாறாக அதை நவீனப்படுத்தவே திட்டமிடுகிறது நேட்டோ. மேலும் இந்த திட்டம் புதியதல்ல என்று நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் வலியுறுத்திக் கூறினார்.
'ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை. நாங்கள் என்ன செய்கிறோம் என்றால்இ எங்கள் விமானங்களுக்கு பதிலாக புதிய ஐந்தாம் தலைமுறை விமானங்களை வாங்குகிறோம்,
பிரிட்டனின் டெய்லி டெலிகிராப் செய்தித்தாளில் சனிக்கிழமை பிரசுரிக்கப்பட்ட ஒரு நேர்காணலில், ஸ்டொல்டென்பேர்க் கூறுகையில், நேட்டோ உறுப்பு நாடுகள் அவற்றின் அணுஆயுதங்களின் நிலை மற்றும் செயல்பாட்டுத் திறன் குறித்து ஆலோசனைகளை,ஆய்வுகளை ஆராயத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். இந்த அறிக்கைகள் ரஷ்யாவாவை மிரட்டுவதற்கான விருப்பமான செயலாகவே விளக்கப்பட்டன.
டெலிகிராப் செய்தியின்படி, நேட்டோ அதன் எதிரிகளுக்கு ஒரு நேரடி செய்தியை அனுப்புவதற்காக அதன் அணுஆயுத தளவாடங்களை உலகிற்கு காட்ட வேண்டும் என்று ஸ்டொல்டென்பேர்க் தெரிவித்தார்.
'அமெரிக்கா அதன் அனு ஆயுதங்களை நவீனப்படுத்துகிறது' என்றும் அவர் அமெரிக்க ஜனாதிபதியுடனான வெள்ளை மாளிகையில் ஒரு சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
போருக்கான அறிகுறிகள் தென்படுவதனால் அத்தியாவசியப் பொருட்களை வேண்டியும், சேமித்தும் வைக்கும்படி டென்மார்க் அரசாங்கம் பொதுமக்களுக்கு அவசர அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இவை அனைத்தும் மூன்றாம் உலகப் மிக அருகில் உள்ளதைக் காட்டுகின்றது.