Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

“மேற்கு நாடுகளால் அச்சுறுத்தல்.. அணு ஆயுதங்களை பயன்படுத்த பரிசீலிக்கும் புதின் – பகிரங்க எச்சரிக்கை

.

“2022 ஆம் ஆண்டு தொடங்கிய ரஷிய உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்த நீடித்து வருகிறது.

மேற்கு நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் சேர உக்ரைன் முயற்சித்ததால் தங்களுக்கு ஆபத்து என்று கூறி ரஷியா இந்த போரை துவங்கியது.

ரஷியா பக்கம் வட கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இருக்கின்றன. போரில் உக்ரைனுக்கு பக்க பலமாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத மற்றும் பொருளாதார ரீதியாக உக்ரைனுக்கு உதவி வருகிறது.

உக்ரைனுக்கு பிரிட்டன் ஸ்டார்ம் ஷேடோ என்ற அதிநவீன ஏவுகணைகளை வழங்கியுள்ளது.

இதை ரஷியா மீது உக்ரைன் பய்னபடுத்தும்பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு புதின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில்தான் இந்த ஒட்டுமொத்த போரானது எந்நேரமும் மூன்றாம் உலகப் போருக்கு இட்டுச் செல்லும் என்று நிலவி வரும் அச்சத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ரஷிய அதிபர் புதின் முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று தொலைக்காட்சி வாயிலாக பேசிய புதின், அதிகரித்து வரும் சர்வதேச பாதுகாப்பு அச்சறுத்தல் காரணமாக ரஷியாவின் அணு ஆயுதங்கள் பயன்பாடு [பயன்படுத்தாமல் இருப்பது உள்ளிட்ட கொள்கைகளில்] திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது.

சர்வதேச ராணுவ மற்றும் அரசியல் சூழல் தொடர்ச்சியாக மாறி வருகிறது,

அதற்கு ஏற்ற முடிவுகளை நாம் எடுத்தாக வேண்டும். நமக்கும் நமது நேச நாடுகளுக்கும் உருவாகியுள்ள புதிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷிய ராணுவ தளபதிகளுடனான கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருவதால் உக்ரைன் ரஷியாவை எதிர்ப்பது என்பது உக்ரைன் வழியாக அதற்கு உதவும் அணு ஆயுத நேரடியாக ரஷியாவை எதிர்ப்பதாகக் கருதப்படும்.

எனவே தாங்களும் தங்களின் அணு ஆயுதங்களை உபயோகிக்கும் நிர்பந்தம் ஏற்படலாம் என்ற வகையில் புதின் பேசியுள்ளது மேற்கத்திய நாடுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் உள்ள மொத்த அணு ஆயுதங்களில், 8-0 சதவீதம், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளன.

ரஷியாவிடம் மட்டுமே 6,732 அணு ஆயுதங்கள் உள்ளன. இதில், 1,572 அணு ஆயுதங்கள் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டு முக்கிய இடங்களில் எந்நேரமும் தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. “,