Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நிதி ஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்தார் வினோ எம்.பி.

.

வினோ நோகராதலிங்கம். 

இவ்வாண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டை தனக்கும் ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

2024ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும், மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட போதும் எனக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வுக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியிடம் மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கென தன்னால் முன்மொழியப்பட்ட திட்டங்களுக்கு ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கியது போல் தனக்கும் அனுமதி வழங்குமாறு நேரில் கோரியிருந்தேன்.

அதன்போது நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதியின் உதவிச் செயலாளரை அழைத்து ஏன் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனக் கேட்டதுடன், நிதி ஒதுக்கீட்டுக்கு ஏற்பாடு செய்யுமாறும் அறிவுரை வழங்கியிருந்தார்.

இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐம்பது மில்லியன் ரூபா நிதி அபிவிருத்தி திட்டங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும் சில எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.