Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சம்மாந்துறை சம்பவம்; இதுவரை 05 பேர் சடலங்களாக மீட்பு!

.

சம்மாந்துறை, மாவடிப்பள்ளி பகுதியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் வாகனம் வெள்ளம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போனவர்களில் மற்றுமொருவருவர் உயிரிழந்த நிலையில் இன்று (28) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் குறித்த டிராக்டர் வாகனத்தின் சாரதிக்கு உதவியாக பயணித்த நபர் என்றும், அவர் வாகன புகைப் பரிசோதனை மேற்கொள்ளும் அதிகாரி என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்று (27) மாலை வரை காணாமல் போன மாணவர்களில் நால்வர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

அவர்களின் சடலங்கள் தொடர்பான பிரேதப் பரிசோதனைகள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் காணாமல் போன ஏனைய இரு மாணவர்களையும் தேடும் முயற்சிகளானது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பின்னணி

நேற்றுமுன்னம் (26) மாலை காரைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பகுதியில் அமைந்துள்ள மத்ரஷா ஒன்றிலிருந்து சம்மாந்துறைக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற டிராக்டரானது வெள்ளத்தால் மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதன்போது, டிராக்டர் வாகனத்தின் சாரதியும் அவரது உதவியாளரும் மற்றும் 11 மாணவர்களும் பயணித்துள்ளனர்.

அவர்களில் 05 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தனர்.

அதேநேரம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போன ஏனையவர்களை தேடும் முயற்சிகளானது இலங்கை கடற்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முன்னதாக டிராக்டர் வாகனத்தின் சாரதி காணாமல் போனதாக கூறப்பட்டிருந்தார், எனினும் அவர் தற்சமயம் உயிருடன் உள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 12 – 16 வயதுக்கு இடைப்பட்ட சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.