Breaking News
திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று திடீரென நுழைந்தது.
.
பாடசாலைக்குள் புகுந்த சிறுத்தை; நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை!
திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று இன்றுமாலை திடீரென நுழைந்தது. இதை பார்த்ததும் மாணவ- மாணவிகள் அச்சம் அடைந்தனர். உடனே பள்ளி நிர்வாகம் மாணவிகளை உடனடியாக பள்ளியில் இருந்து பத்திரமாக வெளியேற்றினர்.
அதற்குள் அந்த சிறுத்தை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அப்போது ஒரு நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த சிறுத்தை மரங்கள் அடர்ந்த பகுதியில் புகுந்து மறைந்துள்ளது. சிறுத்தை மறைந்துள்ள பகுதியில் இரண்டு கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதில் ஐந்து பேர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து திருப்பத்தூர் நகர பள்ளிகளுக்கு கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்