அமித் ஷாவை பிரதமராக்க பாஜக முயற்சிப்பதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்
மோடி பிரதமர் வேட்பாளர் இல்லையா?
மோடி பிரதமர் வேட்பாளர் இல்லையா?
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து திகார் சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள அனுமன் கோயிலில் தனது மனைவி சுனிதாவுடன் சாமி தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின், மம்தா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என கேட்டும் மோடியிடம், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வியை தான் கேட்பதாக கெஜ்ரிவால் கூறினார்.
பாஜகவின் விதிப்படி, 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவி வகிக்க முடியாது என்பதால், விரைவில் 75 வயதை எட்டவிருக்கும் பிரதமர் மோடி, அமித் ஷாவை பிரதமராக்க வாக்கு சேகரித்து வருவதாக கூறினார்.
பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், மோடியே பிரதமராக தொடர்வார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், 5 ஆண்டுகளுக்கும் மோடியே பிரதமராக தொடர்வார் என்று கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதைப் போன்று, பாஜகவில் எந்த விதியும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி தொடர்வார் என்பதில், தங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை என்றும் அமித் ஷா திட்டவட்டமாக கூறினார்.