மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு எதிர்காலம் இல்லை!
இஸ்ரேல் சர்வதேசச் சட்டங்களை கொஞ்சம் கூட மதிக்காமல், அடிப்படை மனித நாகரிகம் எதுவுமின்றி பிடிவாதமான முறையில் அழிவுகளை ஏற்படுத்திப் பழிவாங்கும் போக்கில் செயற்படுகின்றது.
அமெரிக்காவும் ஏனைய மேலைத்தேச நாடுகளும் தேவையான ஆயுதங்களையும் நிதியையும் வழங்கி இஸ்ரேலை பாதுகாத்து வருகின்றன.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் அவுஸ்திரேலியாவிலும் உள்ள நியாயமான சிந்தனை படைத்த அறிவாளிகள், இஸ்ரேல் கிட்டத்தட்ட சுமார் நூறு வருடங்களாக பலஸ்தீன மக்கள் மீது புரிந்து வருகின்ற கொடூரங்கள் காரணமாக அதுசரிவடைந்து விடும் என்று முன் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்ரேல் சர்வதேசச் சட்டங்களை கொஞ்சம் கூட மதிக்காமல், அடிப்படை மனித நாகரிகம் எதுவுமின்றி பிடிவாதமான முறையில் அழிவுகளை ஏற்படுத்திப் பழிவாங்கும் போக்கில் செயற்படுகின்றது.அந்த ஆதரவோடு சிறுவர்கள், பெண்கள், வைத்தியர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் முதியோர், சிறுவர்,
ஆண்கள், பெண்கள் என எல்லா தரப்பையும் இஸ்ரேல் கொன்று குவித்த வண்ணம் உள்ளது. ஆயுதம் தரித்த எதிரிகளுக்கும் அப்பாவிகளுக்கும் பேதம் காண முடியாமல் இஸ்ரேலின் படுகொலைகள் தொடருகின்றன.
இதன் விளைவாக இஸ்ரேல், இப்பிரதேசத்தின் சுதேச மக்களோடு இணைந்து வாழும் வாய்ப்பை இழந்துவிட்டது.
இப்பிரதேச மக்கள் முன்னொருபோதும் இல்லாத வகையில் இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக அணி திரண்டுள்ளனர்.
இஸ்ரேல் இனிமேலும் தனது நையாண்டி தத்துவங்களைக் கொண்டு தனது வன்முறை இனவாதத்தை நியாயப்படுத்த முடியாது.
அமெரிக்க அரசியல் விஞ்ஞானியும், சர்வதேச உறவுகள் தொடர்பான கல்விமானுமான ஜோன்.ஜே,மியஷ்மர் “இஸ்ரேல் காஸா யுத்தததில் தோல்வியை சந்தித்து வருகின்றது. அதேநேரம் வடமுனையில் இஸ்ரேல் ஹிஸ்புல்லாஹ்வை எதிர்த்துப் போர் புரிகின்றது.
இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலை புரிகின்றது என்று குற்றம்சாட்டி வழக்குத் தொடரத் தேவையான சான்றுகள் உள்ளதாக சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசியல் இயங்கு விசையின் தூண்டுதலால் ஆக்கிரமிப்பின் ஊழல் மிக்க செல்வாக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களை கீழ்த்தரமான பிரஜைகளைகளாக பார்க்க வைத்துள்ளது” என்று குறிப்பிடுகின்றார்.
தென் ஆபிரிக்காவினதும் இஸ்ரேலினதும் பிரதிநிதிகளது வாதங்களுக்கு சர்வதேச நீதிமன்றம் செவி சாய்த்துள்ளது. ஹலோகோஸ்ட் வாதத்தை முன்வைத்த இஸ்ரேல் அதை ஒக்டோபர் 7 சம்பவத்தோடு ஒப்பிட்டு நீதிமன்றத்தின் கவனத்தை திசை திருப்புவதற்கு முயன்றது.
தனது இராணுவம் அப்பாவிகளை கொலை செய்து வருவதில் இருந்தும் நீதிமன்றத்தின் கவனத்தை திசை திருப்புவதற்கு மனிதச் சங்கிலி தர்க்கத்தையும் அது முன்வைத்தது.
ஆனால் அந்த வாதங்கள் எவையும் எடுபடவில்லை. இந்த யுத்தம் காரணமாக இஸ்ரேல் உலகளாவிய அதன் ஆதரவை இழக்கத் தொடங்கி உள்ளது.
கட்டாரில் செயற்படும் அல்-ஜஸீராவின் சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் மர்வான் பிஷாரா “இஸ்ரேலுக்கு மத்திய கிழக்கில் எதிர்காலம் கிடையாது.
காஸா யுத்தம் முடிவின் ஆரம்பமாக அமையலாம். ஆனால் அது பலஸ்தீனர்களுக்கு அல்ல. காஸா மீதான இஸ்ரேலின் துன்பம் மிக்க யுத்தம் நீண்ட தொடர் குற்றவியல் கொள்கைகளின் உச்சகட்டமாகும்.
நீண்டகால அடிப்படையில் இது தற்கொலைக்கு சமனானது. அதன் முடிவு சக்திமிக்க யூத தேசத்தின் அழிவாகவே இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் தற்பாதுகாப்பு என்ற போர்வையில் பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் மூர்க்கத்தனமான படுகொலைகள் அதன் பாதுகாப்பை மேம்படுத்தவோ அல்லது எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யவோ போவதில்லை.
மாறாக அது மிகப் பெரிய ஒரு பாதுகாப்பற்ற நிலையையும் ஸ்திரமற்ற நிலையையுமே உருவாக்கும். இஸ்ரேலை அது மேலும் தனிமை படுத்தி பெரும்பாலும் விரோதப் போக்குடைய பிராந்தியத்தில் அதன் நீண்டகால இருப்புக்கான வாய்ப்புக்களை மங்கச் செய்து விடும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“ஒரு கேலிக் கூத்தின் முடிவு : உலகளாவிய கண்டனங்களோடு இஸ்ரேலின் சரிவு” எனும் தலைப்பில் ஓய்வு பெற்ற பேராசிரியர் அட்ரியன் லிபர்டோ எழுதியுள்ள கட்டுரையில் “இஸ்ரேல் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஒரு பொறுப்பான தேசமாக அது உருவாக்க வேண்டிய எல்லா நற்பெயர்களையும் இழந்து விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் ஒரு வகையான இறையியல் சார்ந்த இனவாத நாடு. பலஸ்தீன பூமியையும், வீடுகளையும், வாழ்வாதாரங்களையும், உயிர்களையும் திருடியே அதுஉருவாக்கப்பட்டது.
பலஸ்தீன பூர்வீகக் குடிகளின் உரிமைகளை கண்டபடி துஷ்பிரயோகம் செய்வதற்கு தேவையான ஆதரவும் அனுமதியும் வழங்கப்பட்டது.
இப்போது இந்தச் சொத்துக்கள் மீது அதிகமான யூதர்கள் உரிமை கோரி வருகின்றனர். ஆனால் பெரும்பாலான இஸ்ரேலியர்கள் யுத்தத்துக்குப் பிந்திய வந்தேறு குடிகள் என்பதே உண்மையாகும்.
காஸா போருக்கு மிக நீணட நாட்களுக்கு முன்பே முன்னணி இஸ்ரேலிய ஊடகவியலாளரான ஆரி ஷாவிட் இஸ்ரேலின் மரணத்தை முன்னறிவிப்பு செய்திருந்தார். “நாம் அறிந்த வகையில் இதே நாசகார பாதையில் இஸ்ரேல் பயணித்தால் அது மரணித்துவிடும்” என்றார்.
இஸ்ரேலின் இரகசிய சேவையான ஷின்பேட்டின் முன்னாள் தலைவர் அமி அயலோன், “அரசாங்கத்தின் யுத்தமும் ஆள்புல விஸ்தரிப்பும் இஸ்ரேலின் முடிவுக்கு வழியமைக்கும்” என்று எச்சரித்திருந்தார்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வரக்கிடைத்த பல சந்தர்ப்பங்களை அது வீணாக்கி விட்டது. அதன் அண்டை நாடுகளுடன் அமைதியாக வாழக்கிடைத்த வாய்ப்பக்களையும் அது தட்டிக்கழித்தது.
இஸ்ரேல் அதன் ஆக்கிமிப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பதிலாக பலஸ்தீன பூமியில் தனது காலணித்துவ திட்டத்தை அது இரட்டிப்பாக்கியது. இவ்வாறுதான் தென்ஆபிரிக்காவில் இனவாதத்துக்கு முடிவு கண்ட போதிலும் இஸ்ரேல் மத்திய கிழக்கில் இனவாதத்துக்கு தூபமிட்டது.
சமாதானத்தை இழந்த நிலையில் காலணித்துவத்தின் நிழலில் இஸ்ரேல் பாசிசத்தை நோக்கி நகர்ந்தது. யூத மேலாண்மை போக்கை அது தனது சட்டங்களுக்குள் புகுத்தியது. அவற்றை வரலாற்றுப்பெருமை மிக்க பலஸ்தீன பூமிக்குள் பிரயோகித்தது.
ஜோர்தான் நதிக்கரை முதல் மத்தியதரை கடல் பிரதேசம் வரை அதை நீடித்தது. காலப்போக்கில் வெறிபிடித்த தீவிர வலதுசாரி கட்சிகளின் செயற்பாடுகள் அங்கு தீவிரமாகி அதிகாரபீடத்தின் கட்டுப்பாட்டை தம் வசமாக்கிக் கொண்டன.
பென்ஜமின் நெத்தன்யாஹ{வின் சந்தர்ப்பவாத தலைமைத்துவத்தின் கீழ் அவை ஒன்று திரண்டன. இஸ்ரேலின் நிறுவனக் கட்டமைப்புக்களை அவை குறைத்து மதிப்பிட்டன.
இரண்டு சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துடனும்; சமாதானத்துடனும் வாழக்கூடிய எல்லா வாய்ப்புக்களையும் அவை குறைத்தே மதிப்பிட்டன.
விட்டுக்கொடுப்புக்கான எல்லா வாய்ப்புக்களையும் அவர்கள் நிராகரிததனர். வரலாற்றுப்பெருமை மிக்க பலஸ்தீனத்தை மொத்தமாக விழுங்கும் செயற்பாட்டை அவர்கள் தொடங்கினர்.
திருடப்பட்ட பலஸ்தீன பூமிகளில் யூத குடியிருப்புக்களை அவர்கள் விஸ்தரித்தனர். பலஸ்தீனத்தின் மேற்குக் கரை வரை அது தொடர்ந்தது.
பலஸ்தீன மக்களை அங்கிருந்து கசக்கிப் பிழிந்து வெளியேற்றும் ஒரு நடவடிக்கையாக அவர்கள் இதைத் தொடர்ந்தனர்.
காஸா முனையின் முற்றுகையையும் அவர்கள் இறுக்கமாக்கினர். உலகின் மிகப்பெரிய திறந்தவெளி சிறைச்சாலையாக அது மாற்றப்பட்டது.
ஒரு இறையாண்மை மிக்க பலஸ்தீன நாட்டுக்குள் தமது சொந்த பந்தங்களோடு இணைந்து சுமுகமாக வாழும் வாய்ப்பு கூட அம்மக்களுக்கு மறுக்கப்பட்டது.
அப்பின்னணியில் தான் ஒக்டோபர் 7 தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இஸ்ரேலின் காலணித்துவவாதம் ஏற்புடையதும் அல்ல, ஸ்திரத்தன்மை கொண்டதும் அல்ல என்பதை அந்த சம்பவம் முதல் தடவையாக இஸ்ரேலை உணர வைத்தது.
20 இலட்சம் மக்களை அடைத்து மூடி வைத்து விட்டு சாவியை எங்காவது வீசி விடலாம் என்ற அதன் கனவு பொய்யானது.
முரண்பாட்டின் மூலாதாரத்தை தேட வேண்டும் என்ற நிலைக்கு அது இப்போது தள்ளப்பட்டுள்ளது. மக்களை வெளியேற்றல், ஆக்கிரமித்தல், முற்றுகையிடல் என எல்லாவற்றுக்கும் பலஸ்தீன மக்களோடு கலந்து பேசி முடிவு காண வேண்டிய நேரம் வந்துள்ளது.