Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

ஈழத்து திருச்செந்தூர் ஆலய சூரன்போர்

.

கந்தஷஷ்டி விரத்தின் மிக முக்கியத்துவமான நிகழ்வான சூரம்சம்ஹாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

மட்டக்களப்பு,ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தில் கந்தசஸ்டி விரதத்தின் சூரசம்ஹார நிகழ்வு நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு,திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்த சஸ்டி விரதம் கடந்த 02ஆம் திகதி சனிக்கிழமைஆரம்பமானது. முருகப்பெருமானுக்கு கந்தசஸ்டி விரதத்திற்கான கும்பம் வைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றுவந்தன. பக்தர்கள் விரதமிருந்து கந்தசஸ்டி விரதம் அனுஸ்டித்ததுடன் தினமும் ஆலயத்தில் கந்தபுராண படலம் பாடும் நிகழ்வும் நடைபெற்றது.

நேற்று பிற்பகல் சூரசம்ஹாரத்திற்கான வேல் கல்லடி முத்துமாரியம்மன் ஆலயத்தில் பெற்றுக்கொண்டு வேல்படையானது ஆலயத்தினை ஊர்வலமாக வந்தடைந்து. அதனை தொடர்ந்து சூரனை வதம் செய்யும்போது நடைபெற்ற நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சூரன்போர் நடாத்தப்பட்டது.

ஆலயத்தின் முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று பூதப்படை சூழ முருகப்பெருமான் ஊர்வலமாக சென்று சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன் ஆலயத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவானோர் கலந்துகொண்டனர்.