Breaking News
சென்னை 48 ஆவது புத்தகக் கண்காட்சி!;திலீபனுடன் 12 நாள்கள்,மாமனிதர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை, கண்டேன் கண்டேன் தலைவரைக் கண்டேன்.
.

சென்னை 48 ஆவது புத்தகக் கண்காட்சியில், காரா பதிப்பகம் சார்பில் பேராசிரியர் அறிவரசன் எழுதிய மாமனிதர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை, கண்டேன் கண்டேன் தலைவரைக் கண்டேன் மற்றும் கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் எழுதிய திலீபனுடன் 12 நாள்கள் ஆகிய நூல்கள்* *வெளியீட்டு விழா இன்று 1-1-2025 புதன்கிழமை*
*கண்காட்சி அரங்கில்* *அரங்கு எண் 128 காரா பதிப்பக அரங்கில் நடைபெற்ற* *நிகழ்ச்சியில் பேராசிரியர் அறிவரசன் நூல்களை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டு* *உரையாற்றினார். மூத்த வழக்கறிஞர் தமிழ்நாடு அரசியல் சமூக செயற்பாட்டாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்*. *கல்கி ப்ரியன், வாஞ்சிநாதன் நூலை கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வெளியிட பழ.நெடுமாறன் பெற்றுக் கொண்டார். பேராசிரியர் அறிவரசன் புதல்வர் அழகிய நம்பி முன்னிலை வகித்தார்*. தமிழ் ஆர்வலர் கவியரசன் வரவேற்றார். காரா பதிப்பக நிறுவனர் ரா. பொ.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் வழக்கறிஞர் புகழேந்தி*, ஆவல் கணேசன், புலவர் ரத்தினவேலன், தொழிலதிபர்* மணிவன்னன், கவிஞர் பாலமுரளி வர்மன், தமிழ் இளைஞர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் விழுப்புரம் பாபு மற்றும் தமிழ் ஆர்வலர்கள், வாசகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.