Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஆயுதப் படைகளை ‘அனைத்து அம்சங்களிலும்’ மேம்படுத்துவதற்கு திட்டம்

.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு ஆயுதப்படைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு பல ‘வழக்கத்திற்கு மாறான’ அச்சுறுத்தல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர், முப்படைகள் தொழில் ரீதியாக தரமுயர்த்துவது உட்பட அனைத்து அம்சங்களிலும் அபிவிருத்தி செய்யப்படும் என மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

“நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்த கடமையை செய்வதற்கு அவசியமான காரணங்கள் அனைத்தையும் நாம் கண்டறிந்துள்ளோம். எமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும் நாம் கண்டறிந்துள்ளோம்.

ஆகவே என்னுடைய தலைமையின் கீழ் நாட்டு மக்கள், பொது மக்கள் அளெசகரியங்களை எதிர்கொள்ளும் அனைத்து முறைகளிலும் ஏற்படும் சம்பிரதாயபூர்வமல்லாத அச்சுறுத்தல்கள் நிறையவே இருக்கின்றன. அந்த சம்பிரதாயபூர்வமல்லாத அச்சுறுத்தல்களுக்கு முடிந்தவரை விரைவாக நிவாரணமளித்து முப்படையினருக்கும் காணப்படும் இயலுமையை மேலும் முன்னேற்றமடையச் செய்து அவர்களின் அர்ப்பணிப்பின் அடிப்படையில் அந்த பணியை நிறைவு செய்வதே எமது அரசின் எதிர்பார்ப்பு.”

பாதுகாப்பு அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் கடந்த வார இறுதியில் கண்டி தலதா மாளிகைக்குச் சென்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்கொந்தாவிடம், ஆயுதப்படைகளின் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்வது என்பதன் அர்த்தம் என்னவென ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், ஆயுதப்படைகளை தொழில்சார் மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு தாம் செயற்படுவதாக தெரிவித்திருந்தார்.

“இராணுவத்தின் அனைத்து பக்கத்திலும் நவீன தொழில்நுட்பம், பயிற்சி, பயற்சிப் பெற வேண்டிய வாய்ப்பு, தொழில் ரீதியாக உயர் நிலைக்குச் கொண்டுச் செல்வதற்கான அனைத்து காரணங்களையும் கண்டறிந்து முறையான வகையில் செயற்படுவதே எமது எதிர்பார்ப்பு.”

கடந்த காலங்களில், இலங்கையின் பாதுகாப்புப் படைகள் மிக உயர்ந்த தொழில்முறை மட்டத்தில் இருப்பதாக அரசாங்கத்தின் அதிகாரிகளும் இராணுவத்தினரும் அடிக்கடி வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.