Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

சிரிய விவகாரத்தில் தலையிடமாட்டோம்; ஜோ பைடன், ட்ரம்ப் கூட்டாக அறிவிப்பு Facebook Twitter Pintere

.

சிரியாவின் உள்நாட்டு போர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தரப்பும், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தரப்பும் தெரிவித்துள்ளன.

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு போர் வெடித்த நிலையில், தற்போது நாடு முழுவதும் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது. சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து, யாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் ராணுவத்துடன் சண்டையை தொடங்கினர். ஆசாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் நேற்று தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் முழுவதும் கிளர்ச்சியாளர்கள் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதன் மூலம் ஆசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி சிரியாவில் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் சிரியாவின் உள்நாட்டு போர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த விவகாரத்தில் ஐக்கிய மாகாணங்கள் எதுவும் செய்யக்கூடாது. இது நம்முடைய போர் அல்ல. அது நடக்கட்டும். அது நமது நட்பு நாடல்ல. இதில் ஈடுபட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஜோ பைடன் அரசும் சிரியா விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜோ பைடனின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது. அதே நேரத்தில் இஸ்லாமிய தேசத்தில் (ஐஎஸ்) பயங்கரவாதிகள் மீண்டும் தலையெடுக்க அமெரிக்கா அனுமதிக்காது” என்றார். சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்காத வகையில் அங்கு 900 அமெரிக்க ராணுவ வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.