Breaking News
இந்திய உயர்ஸ்தானிகராலயம் முன் கூடிய ஆர்ப்பாட்டகாரர்கள்; ஷேக் ஹசீனாவுக்கு கடும் எதிர்ப்பு!
.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா ஆதரவு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரை இந்தியாவிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் எனக்கூறியும் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தற்போது அவர் இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு அருகில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.
இலங்கை – பங்களாதேஷ் நற்புறவு சங்கத்தின் ஏற்பாட்டின் இன்று இந்திய உயர் ஸ்தானிகராலயத்ததுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, குறிதத் சங்கத்தின் ஆர்வலர்கள் கலந்துகொண்டதுடன் பங்களாதேஷின் முன்னாள் பிமதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிராக தமது கண்டனங்களையும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.