Breaking News
இலங்கை வருகின்றார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி; சீதை அம்மன் கோவிலுக்கும் விஜயம்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
இலங்கை வருகின்றார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி; சீதை அம்மன் கோவிலுக்கும் விஜயம்.
இந்தியாவின் பிரபல ஆன்மீக தலைவர்களில் ஒருவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
மேலும், 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு வருகைத்தரவுள்ள அவர் நுவரெலியா சீதை அம்மன் கோவிலுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் ஜீவன் தொண்டமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இலங்கையின் அண்மைக்கால அபிவிருத்திகள் மற்றும் பெருந்தோட்ட சமூகத்தினருக்கு கௌரவமான வாழ்வை உறுதிசெய்வதற்கான தனது அர்ப்பணிப்பு கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்தும் பேசியிருந்தேன் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.