பிரதமராக சம்பிக்க? ராஜித, பொன்சேகாவுக்கு முக்கிய அமைச்சுப் பதவிகள்; தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சி!
.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான விடயங்களை எதிர்வரும் 2ஆம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதுடன், அதன் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியிலுள்ள குழுவொன்று ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து அந்தக் குழுவினரை இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கத்தை அமைக்க நடடவடிக்கை எடுப்பது தொடர்பில் தற்போது அரசியல் உயர்மட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அரசாங்கம் அமைக்கப்படுமாக இருந்தால் தற்போதைய பிரதமர் தினேஸ் குணவர்தன நீக்கப்பட்டு புதிய பிரதமராக சம்பிக்க ரணவக்கவை நியமிப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அத்துடன் ராஜித சேனாரட்ன, சரத் பொன்சேகா ஆகியோருக்கு முக்கிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி தேசிய அரசாங்கத்தை அமைத்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை அறிவிக்க திட்டமிடப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுவொன்று ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவுள்ளதுடன் மற்றைய குழு எதிர்க்கட்சிப் பக்கம் செல்ல நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.