Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

வடகிழக்கு இளைஞர்களின் ஆதரவு நாமலுக்கு!; கீத்நாத் காசிலிங்கம் நம்பிக்கை

.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நாமல் ராஜபக்ஷவுக்கு வட கிழக்கு இளைஞர்களின் ஆதரவு கிடைக்கும் என பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ வடகிழக்கு மாவட்டங்களில் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அவர்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டுள்ளவர் என்பதால் வடக்கு, கிழக்கு இளைஞர்களின் ஆதரவை பெறும் முதலாவது ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ விளங்குவார் என கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

2009இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்குக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எனவும் தெரிவித்துள்ள அவர், மக்களின் துயரங்களை அறிந்துகொள்வதற்காகவே நாமல் ராஜபக்ஷ அங்கு சென்றார், அந்த பகுதியின் அரசியல் பொருளாதார சமூக நிலை குறித்து நாமல் ராஜபக்ஷ ஆழ்ந்த அறிவை பெற்றுக்கொண்டுள்ளார் என கீத் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகளை விட அதிக வாக்குகள் நாமல் ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக மாற்றத்தை எதிர்பார்க்கும் இளம்தலைமுறையினர் நாமல் ராஜபக்ஷவை ஆதரிப்பார்கள் எனவும் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.