“தேசத்தின் குரல்” எனும் கௌரவத்தை தமிழீழ தேசியத் தலைவர் வழங்கியிருந்தார்.
.
மறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு “தேசத்தின் குரல்” எனும் கௌரவத்தை தமிழீழ தேசியத் தலைவர் வழங்கியிருந்தார். தாயக சுதந்திர போராட்ட வாழ்வில் காத்திரமான பங்களிப்பை வழங்கிய தேசத்தின் குரலின் நினைவு நாள் இன்றாகும். தாயகத்தின் சுதந்திர போராட்ட வாழ்வில் காத்திரமான ஒரு பங்களிப்பை தனது அரசியல் ஆளுமையால் வழங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் மற்றும் தலைமை பேச்சாளர் போன்ற வகிபாவங்களினூடாக தமிழர் போராட்டத்தின் நியாயங்களை சர்வதேச பரப்பில் எடுத்துச்சொன்ன ஒருவராக தாயக போராட்ட வரலாற்றில் அன்ரன் பாலசிங்கம் முதன்மை பெறுகிறார். மட்டக்களப்பில் பிறந்த இவர் பிரித்தானிய பிரஜாவுரிமை கொண்ட ஈழத்தமிழரவார். ஆரம்ப காலத்தில் இலங்கையின் தமிழ் நாளிதழ் ஒன்றில் பத்திரிகையாளராக பணியாற்றிய பாலசிங்கம் பின்னர் கொழும்பின் பிரித்தானிய தூதரகத்தில் மொழி பெயர்ப்பாளராகவும் கடமையாற்றினார்.
தேசத்தின் குரல்
பிரித்தானிய தூதரகத்தில் 10 ஆண்டுகள் கடமையாற்றியதனால் பிரித்தானிய குடியுரிமை பெற்றுக்கொண்டார்.
1970களில் பாலசிங்கம் அவர்கள் இங்கிலாந்தில் இருந்து எழுதிய கொரில்லாப் போர் முறை குறித்த நூலை வாசித்த தமிழீழ தேசியத் தலைவர், பாலசிங்கம் அவர்களுடன் தொடர்பு கொண்டதன் மூலம் இவருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்குமான தொடர்புகள் ஆரம்பமாகியது.
நித்திய வாழ்வினில் நித்திரை கொள்பவர் செத்திடப் போவதில்லை! எங்கள் தத்துவமேதையும் செத்துவிட்டான் என கத்திடப் போவதில்லை....!!