Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சிசு செரிய பஸ் சேவைக்காக 500 புதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு கலாநிதி பந்துல குணவர்தன.

.

சிசு செரிய பஸ் சேவைக்கு மேலதிகமாக 500 புதிய பேருந்துகளை இணைக்க நடவடிக்கை.

2005 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் பாடசாலை, தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான அரசாங்கத்தின் மானியத்துடன் கூடிய சிசு செரிய பஸ் சேவைக்காக 500 புதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு (NTC) பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் 811 பஸ்கள் மற்றும் 726 தனியார் பஸ்கள் உட்பட ஆயிரத்து ஐந்நூற்று முப்பத்தேழு பஸ்கள் சிசு செரிய சேவைக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அரசாங்கம் இதற்காக மானியமாக ரூ. ந்த ஆண்டு 2,000 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது..

போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பாடசாலைப் பேரூந்துகள் தேவைப்படுவதனால் மாணவர்களுக்காக 500 புதிய பேருந்துகளை இயக்குவதற்கு NTC வருமானத்தைப் பயன்படுத்துமாறு அமைச்சர் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார். ஒவ்வொரு மாகாணத்தின் பிராந்திய அபிவிருத்திக் குழுவின் தலைவர் NTC க்கு முன்மொழிவை அனுப்பிய பின்னர், அந்தப் பகுதிகளுக்கு பேருந்துகள் அனுப்பப்படும்.