இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று ஜனாதிபதி: அனுரகுமார திசாநாயக்க
.
மாக்சிசமென தன்னை அடையாளப்படுத்திய ஜேவிபி என்கிற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்தை எட்டாத நிலையில் இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணப்பட்டு மாவட்ட ரீதியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல் 02 இடங்களில் முன்னிலை வகித்த அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச தவிர ஏனைய அனைத்து வேட்பாளர்களும் நீக்கப்பட்டு விருப்பு வாக்கு எண்ணப்பட்டது.
இதன் முடிவுகளுக்கமைய அனுரகுமார திசாநாயக்க , ஜனாதிபதியாக தேர்வானார். ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அநுர குமார திசாநாயக்கவுக்கு 105 நாடாளுமன்ற ஆசனங்களும், சஜித் பிரேமதாசவுக்கு 78 ஆசனங்களும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு 37 ஆசனங்களும், நாமல் ராஜபக்சவுக்கு 1 ஆசனமும் அரியநேந்திரனுக்கு 04 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
விருப்பு வாக்குகளில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் முன்னிலை வகிக்கின்ற போதிலும் மொத்த வாக்குகளை தொடுவது அவருக்கு கடினமாக இருந்த நிலையில் அனுர வெற்றிப்பெற்றுள்ளார்.
இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 12,915,795 என்பதுடன் இதில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 12,632,003 ஆகும். நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 283, 792 ஆகும்.
விருப்பு வாக்கு முடிவுகள்
இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 12,915,795 என்பதுடன் இதில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 12,632,003 ஆகும். நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 283, 792 ஆகும்.