Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

விடுதலைப் புலிகள் செய்யாததை ஆசிரியர்கள் செய்கின்றனர் – மனுச நாணயக்கார

.

தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த யுத்தக் காலத்திலும் பாடசாலைகளை மூட இடமளிக்கப்படவில்லையென வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார். மத்துகம பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நடந்த சந்தர்ப்பத்தில் ஆசிரியர்கள் பதுங்குக் குழிகளுக்குள் அமர்ந்து மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தனர்.
தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நலனுக்காக 10,000 பாடசாலைகள் மூடப்படுவது அவர்களது பலம் எனக் கருதுகின்றனர். யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் பாடசாலைகளை மூடுவதற்கு இடமளிக்கவில்லை. ஆசிரியர்கள் தெய்வங்கள் என்ற நிலைமையை மாற்றி, பாடசாலைக்குச் செல்லாத தொழிற்சங்கங்களின் தலைவர்கள் அரசியல் நலனுக்காக அதிபர்களையும் ஆசிரியர்களையும் பயன்படுத்தி இலவசக் கல்விக்குப் பாரிய களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

கட்சி நிற வேறுபாடின்றி ஒரே அரசாங்கத்தில் இணைத்துள்ளோம். இன்று அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் அரசியலைப் பற்றிச் சிந்திக்காமல் ஒன்றிணைந்துள்ளதாக அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.