செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிடவுள்ள நீதிவான்!
.

யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் நேற்று மாலை யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், குறித்த மயானத்தின் நிர்வாக உறுப்பினருமான கிருபாகரனினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டது.
யாழ். செம்மணியில் உள்ள சிந்துபாத்தி இந்து மயானத்தில் அண்மையில் அபிவிருத்திப் பணிகளுக்காக நிலத்தைத் தோண்டியபோது மண்டையோடு உள்ளிட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. இந்த விடயம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் மேற்படி விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பொலிஸாரிடம் நேற்று முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டுக்கமைவாக பொலிஸார் குறித்த விடயத்தை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அந்தவகையில் நாளையதினம் மாலை 3மணிக்கு குறித்த பகுதியை நீதிவான் பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.