Breaking News
பிரின் பிரதாபன் பல சவாலான படிகளைத் தாண்டி இந்த வெற்றியைப்பதிவு செய்துள்ளார்.
29 வயதான பிரின் பிரதாபன் பிரித்தானியா Essex Chelmsford எனும் இடத்தில் வளர்ந்தவர்,இப்போது Bristol பகுதியில் வசிக்கிறார்.இவரின் பூர்வீகம் ஈழத்தில் உரும்பிராய் என்பது குறிப்பிடத்தக்கது.

சமையல் போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்த ஈழ்த்தமிழர் பிரின் பிரதாபன்.
பிரபல தொலைக்காட்சி BBC நடாத்தும் 20 வது MasterChef ஈழம் உரும்பிராய்யை பூர்வீகமாகக்கொண்ட பிரின் பிரதாபன் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். பிரின் பிரதாபன் என்ற பெயருடன் ஒவ்வொரு தடவையும் சிறப்பாக தனது சமையல் திறனை வெளிப்படுத்தி பல சவாலான படிகளைத் தாண்டி இந்த வெற்றியைப்பதிவு செய்துள்ளார்.விலங்கியல் மருத்துவரான பிருந்தன் இந்தத்தொடரில் தனது பின்னணி பண்பாடு, கலாசார அடையாளங்களை தனது பெற்றோர்கள் இருந்து கற்றுக்கொண்டு அதை சமையற்கலையிலும் உள்வாங்கி சிறப்பாக செயற்பட்டது வெற்றிபெற்றதை பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.நடுவர்களாக பங்குபற்றிய விற்பன்னர்களும் பிருந்தனின் சிறப்பான கண்டுபிடிப்புடன் கூடிய தனித்திறமை பற்றி சிறப்புடன் சுட்டிக்காட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். 29 வயதான பிரின் பிரதாபன் பிரித்தானியா Essex Chelmsford எனும் இடத்தில் வளர்ந்தவர்,இப்போது Bristol பகுதியில் வசிக்கிறார்.இவரின் பூர்வீகம் ஈழத்தில் உரும்பிராய் என்பது குறிப்பிடத்தக்கது.