Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்: ஹசன் நஸ்ரல்லா உள்ளிட்ட ஹிஸ்புல்லா முக்கிய தளபதிகள் பலி!

.

லெபனானின் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் தலைமையகம் மீது  தாக்குதல்!

பெய்ரூட்டில் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், 91 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேலின் இலக்கு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா தான் என இந்த விவகாரத்தை நன்கு அறிந்த பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

பெய்ரூட்: லெபனானின் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, ஏவுகணை பிரிவு தளபதி முஹம்மது அலி இஸ்மாயில், துணைத் தலைவர் ஹுசைன் அகமது இஸ்மாயில் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை இன்று தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல் பெய்ரூட்டில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. பல கட்டிடங்கள் சேதமடைந்தன. கடந்த ஓராண்டில் லெபனான் தலைநகர் மீது நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது உள்ளது. இஸ்ரேல் ராணுவம் - ஹிஸ்புல்லா இடையே தீவிரமடைந்து வரும் மோதலானது இருதரப்பிலும் முழு அளவிலான போரை நோக்கி நகர்த்தும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

பெய்ரூட்டில் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், 91 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேலின் இலக்கு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா தான் என இந்த விவகாரத்தை நன்கு அறிந்த பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவம் யாரை குறிவைத்தது என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. ஆனால், இன்று மதியம் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட தகவலில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. எனினும், ஹிஸ்புல்லா இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

இத்தாக்குதலில் சேதமடைந்த 6 கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் குழுக்கள் இன்னும் ஆய்வு செய்து வருகின்றன. எனவே, பலி எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடும் என தெரிகிறது. பெய்ரூட் மீதான தாக்குதலைத் தொடர்ந்து தெற்கு புறநகரின் பிற பகுதிகளில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தியது.

இஸ்ரேல் இந்த வாரம் லெபனானில் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. 11 மாதங்களுக்கும் மேலாக தனது எல்லைக்குள் ஹிஸ்புல்லாக்கள் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் உறுதியாக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. லெபனான் சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, இதுவரையிலான தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 720-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, திட்டமிட்டதற்கு முன்பாக, அமெரிக்கா பயணத்தை முடித்துவிட்டு திடீரென நாடு திரும்பினார். முன்னதாக, அவர் ஐ.நா.வில் உரையாற்றியபோது, கடந்த இரண்டு வாரங்களாக ஹிஸ்புல்லாவுக்கு எதிரான இஸ்ரேலின் தீவிர தாக்குதல் தொடரும் என தெரிவித்தார். இது போர்நிறுத்தம் குறித்த நம்பிக்கையை மங்கச் செய்துள்ளது.