Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் தயார்படுத்தும் நடவடிக்கைகள் !

.

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான வாக்குப்பெட்டிகளை தயார் செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடைபெறவுள்ளதால், வாக்குப்பெட்டிகள் உடனடியாக தயாரிக்கப்படும் . வாக்குச் சாவடி விவரங்கள் கிடைத்தவுடன், வாக்குப்பெட்டிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றை உடனடியாக சரி செய்ய ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது , மேலும் வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட சேதமான வாக்குப்பெட்டிகள் ஏராளமாக உள்ளதாகவும், அவை பழுதுபார்க்க அரசு தொழிற்சாலைக்கு. னுப்பி வைக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தலை இலக்காகக் கொண்டு அதிகாரிகள் கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் எனத் தெரிவித்த ரத்நாயக்க, உள்ளுராட்சி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுடன் அடுத்த வாரம் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகள் குறித்தும் அங்கு விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.