Breaking News
சீன அரசாங்கத்தால் எடுத்து செல்லப்பட்ட யாழ். வல்லிபுர ஆலய மண்!
.
இலங்கையின் கடற்கரையோர பகுதிகளில் காணப்படும் கனிம வளங்களை நீண்டகாலமாக பல்வேறு சர்வதேச நாடுகள், ஆய்வுக்கு உட்படுத்தி சுரண்டி செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், “யாழ். வல்லிபுர கோவில், உள்ள மண் உயர் கனிமத்தை கொண்ட மண், இதனை பலகாலமாக ஆய்வுக்குட்படுத்தி கொண்டு செல்லும் முயற்சியில், பலர் ஈடுபட்டார்கள்.
ஆனால், போர்க்காலம் அவ்வாறன ஒரு வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்தி தரவில்லை. இப்போது, அது மீண்டும் தீவிரம் பெறுவதை நாங்கள் பார்க்க கூடியதாக உள்ளது.
சீன தூதுவர் குறித்த பகுதியில் இருந்து மண்ணை எடுத்து சென்றதாக உள்ளக தகவல்கள் குறிப்பிடுகின்றன என கனேடிய அரசியல் ஆய்வாளர், நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.