Breaking News
கடவுச்சீட்டு வழங்குவதில் மீண்டும் சிக்கல் - ஐந்து மாதங்கள் வரை காத்திருக்கும் நிலை!
.

கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களுக்கு ஐந்து மாத காலத்தின் பின்னரே நேரம் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு எதிர்வரும் மே மாதம் 09ஆம் திகதிக்குப் பின்னரான திகதிகளே ஒதுக்கப்படுகின்றது.
இதன் காரணமாக புதிய விண்ணப்பதாரிகள் சுமார் ஐந்து மாதங்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு பற்றாக்குறை காரணமாகவே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.