கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோலாகலமாக மாறியுள்ள கொழும்பு நகர்!
.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும்1 நாளே உள்ள நிலையில், அதனை வரவேற்கின்ற வகையில் கொழும்பு உள்ளிட்ட பல புறநகர்ப் பகுதிகள் அலங்கார விளக்குகளால் வர்ணமயமாகியுள்ளன.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு, கொழும்பு, நீர்கொழும்பு, வென்னப்புவா, ஹலவத்தை உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய நகரங்கள் அழகிய ஒளி வடிவங்களாலும், கிறிஸ்துமஸ் அலங்காரங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை பொதுமக்கள் திறந்து வைக்கும் நேரத்தை நீட்டிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும் அதன்படி, தாமரை கோபுரம் டிசம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 09 மணி முதல் நள்ளிரவு வரையும், டிசம்பர் 27 ஆம் திகதி காலை 09 மணி முதல் இரவு 11 மணி வரையும் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுமேலும், , தாமரை கோபுரம் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 01 ஆகிய இரு தினங்களிலும் காலை 09 மணி முதல் மறுநாள் நள்ளிரவு 01 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.