Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

’’மரணக் கடிகாரம்’’ ; மரணத்தை துல்லியமாகக் கணிக்கும்!

.

“நம் வாழ்வில் இறுதி நாள் தெரிந்துவிட்டால் வாழும் காலம் நரகமாகிவிடும் என்று சொல்வார்கள். பிறப்பு என்ற ஒன்று இருந்தால் இறப்பு என்பது இருந்துதான் தீரும்.

ஆதலால் நாம் கண்டிப்பாக ஒருநாள் மரணமடைவோம் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் நம் மரணம் எப்போது நிகழும் என்று யாருக்கும் தெரியாது.

ஆனால் தற்போது உலகில் வளர்ந்து தொழில்நுட்பம் நாம் எப்போது இறப்போம் என்பதையும் துல்லியமாக கணிக்க ஆரம்பித்து விட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

மனிதனின் அறிவையும் தாண்டி ஏ.ஐ. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வருகிறது. அவ்வகையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய மரண கடிகாரம் (Death Clock) என்ற ஆப் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ஆப் ஒரு நபர் எப்போது மரணமடைவார் என்று துல்லியமாக கணித்து கூறுகிறது.கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இந்த ஆப்பை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பதே இந்த ஆப்பின் வெற்றியை சொல்கிறது.

இந்த ஆப் சுமார் 5.3 கோடி பங்கேற்பாளர்களின் உதவியுடன் 1,200 க்கும் மேற்பட்ட ஆயுட்கால ஆய்வு தரவுகளின் அடிப்படையில் ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப், உணவு, உடற்பயிற்சி, மன அழுத்த நிலைகள் மற்றும் தூக்கம் பற்றிய தகவல்களைப் பயன்படுத்தி மரணம் நிகழ்வதற்கான சாத்தியமான தேதியைக் கணிக்கின்றது.

தற்போது அமெரிக்காவில் வாழும் 85 வயது முதியவர் ஒருவர் அடுத்த ஒரு வருடத்திற்குள் இறப்பதற்கான சாத்தியம் 10% எனும் சராசரியாக இன்னும் 5.6 ஆண்டுகள் அவர் வாழ்வார் என்றும் மரண கடிகாரம் (Death Clock) கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. “,