Breaking News
கொட்டகலையில் விநாயகர் சதுர்த்தி
.
கொட்டகலை நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக இடம்பெற்றது.
நேற்று மதியம் 12 மணிக்கு கொட்டகலை ஹரங்ட்டன் தோட்டத்தில் இருந்து விநாயகர் சிலை பெருமளவு பக்தர்களுடன் கொட்டகலை பிரதேச சபை முற்றத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு
அங்கிருந்து கொட்டகலை நகரை அண்டிய பகுதிகளில் உள்ள அனைத்து தோட்டங்களில் இருந்து தனி தனியாக அந்த அந்த தோட்ட மக்களால் விநாயகர் சிலைகள் கொட்டகலை பிரதேச சபை முற்றத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரபட்டன.
இதனைத்து தொடர்ந்து அங்கு இருந்து கொட்டகலை நகர்வழியாக அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் உள்ளது கொமர்சல் பகுதியில் உள்ள நீர் தடாகத்திற்கு சுமார் மூன்று ஆயிரம் பக்தர்கள் புடைசூழ எடுத்து வரப்பட்டு தடாகத்தில் கரைக்கப்பட்டது.