Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

இலங்கைக்கு சர்வதேச தலையீடு அவசியமில்லை- வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்!

.

இலங்கைக்கு சர்வதேச தலையீடு அவசியமில்லை எனவும் இலங்கையின் அரசமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு ஊடாகவே நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

‘ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் செப்டம்பரில் நடைபெறவுள்ளது. எனவே மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வந்தது நல்லது. அவருக்கும் அறிக்கை முன்வைப்பதற்கு அது இலகுவானதாக இருக்கும். ஏனெனில் அவரால் விடயங்களை நேரில் அவதானிக்க முடிந்தது. நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திக்காட்டியுள்ளோம் என குறிப்பிட்டார்.

பொருளாதார பாகுபாட்டை நிவர்த்தி செய்தல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அவற்றையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு காணமுடிந்தது. நாம் எதையும் ஒளிக்கவில்லை. வெளிப்படை தன்மையுடன்தான் நடவடிக்கை இடம்பெறும்.

செப்டம்பர் முதல் வாரமளவில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது பற்றிய வர்த்தமானியை வெளியிடுவதே அரசாங்கத்தின் இலக்காக உள்ளது – எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.