Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பிரபல தமிழ் சினிமா இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்!

தமிழ் சினிமாவில் இயக்குநர், ஒளிப்பதிவாளர் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழ் சினிமாவில் இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டு விளங்கிய இயக்குநர் வேலு பிரபாகரன் (68) உயிரிழந்தார். கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த பத்து நாட்களாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1989ம்‌ஆண்டு வெளியான ’நாளைய மனிதன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நாளைய மனிதன் படத்தில் பிரபு, அமலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து அவர் இயக்கிய ’அதிசய மனிதன்’ படமும் வெற்றி பெற்றது. அதிசய மனிதன் படத்தில் நிழல்கள் ரவி, கௌதமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

இதனைத்தொடர்ந்து வேலு பிரபாகரன் சத்யராஜ் நடித்த பிக் பாக்கெட், மோகன் நடித்த உருவம், பிரபு நடித்த உத்தமராசா உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இதுமட்டுமின்றி கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், கடாவர், பீட்சா 3 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 

பின்னர் புதிய ஆட்சி, அசுரன், கடவுள், புரட்சிக்காரன், காதல் கதை, ஒரு இயக்குனரின் காதல் டைரி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் வேலு பிரபாகரன் தனது திரைவாழ்வில் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டார். வேலு பிரபாகரன் 60 வயதில் தனது படத்தில் நடித்த ஷெர்லி தாஸ் என்ற நடிகையை திருமணம் செய்தார். இது திரைத்துறையினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக‌ வைக்கப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இவரது மறைவிற்கு திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சரோஜா தேவி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். பெங்களூருவில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகை சரோஜா தேவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.