Breaking News
யாழ்: பஸ் உரிமையாளர் மீது வாள்வெட்டு
.
யாழ்ப்பாணம் மணியம்தோட்டம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில், வாள்களுடன் முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று பஸ் உரிமையாளரை வாள்களால் தாக்கியதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் யாழ் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாள்வெட்டுத் தாக்குதலில் பஸ் உரிமையாளரின் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகள் ஊடாக சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்இ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.