Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

பிள்ளையான் கைது - யாரோ சிலரைத் திருப்திப்படுத்த அநுர அரசின் நாடகம் - நாமல் ராஜபக்ச.!!

புலிகளை தோற்கடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாலேயே புலம்பெயர்ந்த தமிழரின் தேவைக்காக கருணாவுக்கு பிரிட்டனில் தடை!

பிள்ளையான் கைது - யாரோ சிலரைத் திருப்திப்படுத்த அநுர அரசின் நாடகம் - நாமல் ராஜபக்ச.!!
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிஇ ஜனநாயக வழிக்கு வந்து அந்த அமைப்பை தோற்கடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான் வேண்டுமென்றே கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச இந்த விடயத்தை குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்இ
புலிகள் அமைப்பை தோற்கடிப்பதற்கு இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியதாலேயே புலம்பெயர்ந்த தமிழரின் தேவைக்காக கருணா அம்மானுக்கு எதிராக பிரிட்டனில் தடை விதிக்கப்பட்டது.
அதேபோன்று வேறு நபர்களின் தேவைக்காகவே பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுவும் தெளிவாகின்றது.
பிள்ளையான் தவறிழைத்திருந்தால் தண்டனை வழங்கலாம். ஆனால் புலம்பெயர்ந்தவர்களை திருப்திப்படுத்துவதற்காக செய்யாத தவறுக்காக அவரை தண்டிக்க முற்பட்டால்இ அதற்கு எதிராக நாம் போராடுவோம்.
பிள்ளையான் கைது செய்யப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் ஒரு காரணத்தையும்இ பொது பாதுகாப்பு அமைச்சர் வேறொரு காரணத்தையும் கூறுகின்றனர்.
பிள்ளையான் செய்த சேவை தொடர்பில் கம்மன்பிலவுக்கு தெரியும். கம்மன்பில எமது அணியில் இருந்தவர். எனவேஇ அவருக்காக கம்மன்பில முன்னிலையானது சரியான முடிவே என மேலும் நாமல் தெரிவித்தார்.