Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் களேபரம்!

நாடாளுமன்ற உறுப்பினருக்கும், பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையில் நீண்ட வாக்குவாதம்!

யாழ்ப்பாணம் வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு , பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை , கூட்டத்தில் கருத்து கூற முற்பட்ட பொதுமகன் ஒருவருக்கு அனுமதி வழங்கப்படாதமை உள்ளிட்ட சம்பவங்களால் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் காரசமாக நடந்து முடிந்துள்ளது

வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் , பிரதேச செயலர் அகிலன் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னதாக, வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் இவருக்கே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க முடியும் என சுற்றுநிரூபத்தினை காண்பித்து ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
அதனால் பிரதேச சபை உறுப்பினர்கள் ஒன்று திரண்டு தாம் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என பிரதேச செயலக வாசலில் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதன் போது கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவனையும் வழிமறித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
 
நாடாளுமன்ற உறுப்பினருக்கும், பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையில் நீண்ட வாக்குவாதத்தின் பின்னர் சபை உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கோரினார். அதனால் காலை 10 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய கூட்டம் 10.30 மணியளவிலையே நடைபெற்றது.
கூட்டம் ஆரம்பமான போது பிரதேச சபை தவிசாளருக்கு இணைத்தலைவர்களுக்கு அருகில் ஆசனம் ஒதுக்கப்படாதமை , சபை உறுப்பினர்களுக்கு உரிய இடங்களில் ஆசனம் ஒதுக்கப்படாதமை உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
அதன் போது, வேலணை பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீண்ட நாட்களாக ஓரம் கட்டும் செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகிறது. இதொரு அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலாகவே நாங்கள் கருதுகிறோம் என பிரதேச சபை உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
அதன் போது, கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமகன் ஒருவரும், உறுப்பினர்களுக்கு ஆசனம் ஒதுக்கப்படாதமை குறித்து தனது கருத்தை கூறிய போது நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனின் உத்தரவுக்கமைய , அவரது ஒலிவாங்கி பறிக்கப்பட்டது.
நீண்ட கருத்து மோதலுக்கு பின்னர் பிரதேச சபை தவிசாளர் , உறுப்பினர்களுக்கு ஆசனங்கள் ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கூட்டம் சுமூகமான முறையில் நடைபெற்றது.