Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பிரான்ஸில் தமிழர்களுக்கு பெருமை சேர்ந்த ஈழத்தமிழ் சிறுமி !

டுபாயில் நடைபெற்ற ஏழாவது Roll ball உலகக் கிண்ண போட்டியில் பிரான்ஸின் அணியின் சார்பில் ஈழத்தமிழ் சிறுமி!

பிரான்ஸில் தமிழர்களுக்கு பெருமை சேர்ந்த ஈழத்தமிழ் சிறுமி
டுபாயில் நடைபெற்ற ஏழாவது  Roll ball உலகக் கிண்ண போட்டியில் பிரான்ஸின் அணியின் சார்பில் ஈழத்தமிழ் சிறுமி ஒருவர் பங்கேற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பரிஸ் - பொன்டியில் வசிக்கும் 15 வயதான சானுக்கா ஜெயமன் என்ற சிறுமியே இந்த  பெருமையை பெற்றுள்ளார்.
மன்னாரை சேர்ந்த குடும்பத்தை பின்புலமாக கொண்ட சானுக்கா கடந்த எட்டாம் மாதம் பிரான்ஸிற்கு வந்துள்ளார்.
Roll ball போட்டியில் அபார திறமை கொண்ட அவருக்கு, பிரான்ஸ் அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதற்கமைய கடந்த 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையில் நடைபெற்று சுற்றுத்தொடரில் பிரான்ஸ் அணி சார்பாக அவர் விளையாடியுள்ளார்.
மன்னாரில் வசித்த காலத்தில் முறையான பயிற்சிகளை பெற்ற சானுக்கா, பிரான்ஸிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக பிரான்ஸ் வந்து குறுகிய காலத்திற்குள் France Roll ball அணியொன்றில் விளையாடும் வாய்ப்பினை அவர் பெற்றுள்ளார். 
சுற்றுத்தொடரில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய போதும், சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.