Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வாக்கு வேட்டைக்காக வடக்கிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகளும் ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறி இனவாதத்தை கையிலெடுத்துள்ளனர்!

ஐயோடா சொல்லுவது யாரு நம்ம JVP,NPP அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !!!

வாக்கு வேட்டைக்காக வடக்கிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகளும் ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறி இனவாதத்தை கையிலெடுத்துள்ளனர் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு.
" வாக்கு வேட்டைக்காக வடக்கிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகளும் ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறி இனவாதத்தை கையிலெடுத்துள்ளனர்." - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டினார். 
எனவே, வடக்கிலும், தெற்கிலும் மக்களை பிரித்தாளும் இனவாதத்தை தோற்கடித்து, முன்னோக்கி செல்ல தேசிய மக்கள் சக்திக்கு இம்முறையும் தமிழ் மக்கள் பேராதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.  

யாழ். வேலணை பகுதியில் 02.05.2025 அன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

" இன ஒற்றுமையை ஏற்படுத்தினால்தான் இந்நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். எனவேதான் இது விடயத்துக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கி செயற்பட்டு வருகின்றோம்.
இந்நிலையில் வாக்கு அரசியலுக்காக மக்களை பிரித்தாளும் அரசியலை ராஜபக்ச அணி தெற்கில் முன்னெடுத்து வருகின்றது. 
கடந்த காலங்களில் மக்கள் பாடம் புகட்டியும் அவர்கள் திருந்துவதாக இல்லை." - எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல வடக்கிலுள்ள சிலரும் ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறி மக்களை பிரித்தாளும் பிரச்சாரத்தை செய்கின்றனர். வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்காக எமது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் பல இருக்க, எதுவுமே நடக்கவில்லை என்ற தொனியில் பிரச்சாரம் செய்கின்றனர். 

ஆனால் வடக்கிலும், தெற்கிலும் இனவாத அரசியலுக்கு மக்கள் இனியும் இடமளிக்கமாட்டார்கள் என்பது உறுதி. அதற்கான சிறந்த செய்தியை மே 6 ஆம் திகதியும் வழங்க வேண்டும்.  

வடக்கில் இருந்து இந்த செய்தி தெளிவாக செல்ல வேண்டும்." - எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் இதுவரை காலமும் தீர்க்கபடாத தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு காணப்படும்.
 ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இந்த விடயம் தொடர்பில் கூடிய அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றனர்." - என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார்.