Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மண்டைதீவு புதைகுழி விவகாரம் - 2026 பங்குனி 31 அன்று மீண்டும் நீதிமன்றில்!

வழக்கு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாளன்றுக்கு திகதியிடப்படுள்ளது.

மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கையை மீண்டும் நேற்று (17) அச்சுப் பிரதியாக  ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் வழக்கு 2026 ஆம் வருடம் பங்குனி மாதம் 31ஆம் நாளன்றுக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றால் திகதியிடப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கு  (16) எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்,
அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து  (17) சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று நேற்று முன்தினம் (16) உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து அச்சுப் பிரதியாக்கம் செய்யப்பட்ட அறிக்கையை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மீண்டும் நீதிமன்றில்  சமர்பித்திருந்தனர்.

இதையடுத்து அறிக்கையின் விவரங்கள், சாட்சிகள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்ட நீதிபதி மேலதிக சாட்சிகளின் வாக்குமூலங்களை  குற்றத்தடுப்பு பிரிவினர் பெறவேண்டும் என்ற கோரிக்கையாலும், அகழ்வுக்கான பணிகளை முன்னெடுக்கும்  புறச்சூழல் தற்போது இல்லாததாலும், அவ்வாறான காரணிகளை கருத்தில் கொண்டு குறித்த வழக்கு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாளன்றுக்கு திகதியிடப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.