தமிழர் பகுதியை குறிவைக்கும் சீனா; ஒன்றரை பில்லியன் ரூபாய்க்கு மானியம்
.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மீனவ சமூகங்களுக்கு தயாரிக்கப்பட்ட வீட்டுத் திட்டம், மீன்பிடி உபகரணங்கள் மற்றும் அரசி உட்பட 1.5 பில்லியன் ரூபா மதிப்பிலான மனிதாபிமான உதவியை சீனா வழங்கியுள்ளது.
குறித்த இரு மாகாணங்களுக்கும் தலா 500 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று உதவிப் பொதிகள் சீனாவால் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், சீனாவின் தாராளமான இந்த மானியம் இரு நாடுகளும் பல ஆண்டுகளாகப் பேணி வரும் நெருங்கிய உறவுகளுக்குச் சான்றாகும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சென்றிருந்த பிரதமர் தினேஷ் குணவர்தன, யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மீனவ சமூகங்களுக்கு அரிசிப் பொதிகளை வழங்கும் முதற்கட்ட நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந்த வாரத்தில் கட்டப்பட்ட வீட்டு வசதிகளை ஏற்றிச் செல்லும் கொள்கலன்கள் இரண்டு மாகாணங்களில் உள்ள மீனவ சமூகத்தினருக்கு வீட்டுத் தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளுக்கு இந்த வீட்டு வசதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நவம்பரில், சீனா நாடு முழுவதும் 27,000 மீன்பிடி படகுகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கியிருந்தது.
கடந்த வருடம் நாடு அனுபவித்த மோசமான பொருளாதார நெருக்கடியின் காரணமாக மீனவ சமூகங்கள் எதிர்கொண்ட கஷ்டங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் திட்டத்தின் ஒரு பகுதியாக வழங்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இந்தியாவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாரிய அபிவிருந்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.