Breaking News
பதவி விலகினார் தினேஷ் குணவர்தன!
.
புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்தன இன்று (23) பதவி விலகியுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவின் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்களும் இன்று பதவியிலிருந்து விலகவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அமைச்சர்களின் தனிப்பட்ட ஊழியர்களும் தனமது பணியை இராஜினாமா செய்யவுள்ளதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.