சஜித் தலைமையிலான அணி மீள பொற்காலத்தை உருவாக்குமா?; தொடரும் பரம்பரை அரசியல்
.
இவ்வாறான பின்னணியில், ஐக்கிய தேசியக் கட்சியில் பொற்காலத்தை உருவாக்கிய டி.எஸ் சேனாநாயக்க, ஜே.ஆர் ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச மற்றும் காமினி திஸாநாயக்கவின் காலம் மீள உருவாக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு தற்போது அதிகரித்து வருகிறது.
அதற்கான காரணம், குறித்த நான்கு தலைவர்களினதும் இரண்டாம் மூன்றாம் பரம்பரையை பிரநிதித்துவப்படுத்துபவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியை சுற்றி தற்போது இணைந்திருப்பதே ஆகும்.
ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கிய தலைவரான டி.எஸ் சேனாநாயக்கவின் வம்சாவளியைச் சேர்ந்த வசந்த சேனாநாயக்க, சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் தற்போது இணைந்துள்ள நிலையில் ஜே. ஆர் ஜயவர்தனவின் பேரனான பிரதீப் ஜயவர்தன கடந்த வாரத்தில் சஜித் பிரேமதாசவுடன் இணைந்துள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவரும் 1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய காமினி திஸாநாயக்கவின் மகனான மயந்த திஸாநாயக்க தற்போது சஜித் பிரேமதாசவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார்.
அதன்படி, எதிர்வரும் நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியில் பொற்காலத்தை உருவாக்கிய நால்வரது வம்சாவளியினரும் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியில் செயற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.