நாமலின் குடும்பம் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்
.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷவின் மாமியார், இரு பிள்ளைகள் , இரு பணிப்பெண்கள் மற்றும் உறவினரான பெண் ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர்.
நேற்று (20) கட்டுநாயக்க விமான நிலையத்தின் Silk Route முனையத்தின் ஊடாக டுபாய் சென்றுள்ளனர் என கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர்கள் அறுவரும் நேற்று காலை 10.05 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-651 விமானத்தின் ஊடாக துபாய்க்கு பயணமாகியுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைந்துள்ள Silk Route முனையத்தின் வசதிகளையும் பெற்றுக்கொண்ட இவர்கள் இந்த விமான சேவைக்காக ஒருவருக்கு தலா 52 அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அறுவரும் டுபாய்க்குச் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்கு செல்வதற்கு திட்டமிட்டிருக்கலாம் என அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.