ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் இரண்டு வருடங்களிற்கு ஒத்திவைக்கும் யோசனை பாலித ரங்க பண்டார .
சர்வதேசத்தின் நம்பிக்கையை நாங்கள் மீள பெற்றுள்ளோம் பொருளாதாரநிலையை ஸ்திரப்படுத்தியுள்ளோம்.
ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் இரண்டு வருடகாலத்திற்கு ஒத்திவைக்கும் யோசனை; ஐ.தே.கட்சி வெளியிட்டது.
அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் தேவைப்பட்டால் இந்த யோசனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இது தொடர்பில் சர்வஜனவாக்கெடுப்பை நடத்தலாம் என தெரிவித்துள்ளார்.
இது இலங்கையின் வரலாற்றில் முக்கியமானதொரு தருணம் என தெரிவித்துள்ள அவர் நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டது ஆனால் அதற்கு தீர்வை காண்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன இவற்றின் மூலம் குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்தின் நம்பிக்கையை நாங்கள் மீள பெற்றுள்ளோம் பொருளாதாரநிலையை ஸ்திரப்படுத்தியுள்ளோம் பொதுமக்களிற்கு நிவாரணங்களை வழங்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் இந்த விடயங்களை சாதித்துள்ளோம், எனவும் தெரிவித்துள்ள அவர் நாட்டின் தற்போதைய தேவைகள் ஜனாதிபதி தேர்தல் பொதுத்தேர்தலுடன் தொடர்புபட்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.