பலதும் பத்தும்:- 23,04,2025 - இலங்கையின் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் பாப்பரசராகதெரிவு செய்யப்படலாம் – சர்வதேச ஊடகங்கள் எதிர்வுகூறல்!
பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு சபாநாயகர்விடுத்துள்ள அறிவிப்பு!

620 Mg ஹெரோயின் கைது!
அராலி வீதி பொம்மைவெளி பகுதியில் வைத்து இரண்டு சந்தேக நபர்கள் 620 ஆப ஹெரோயின் போதைபொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ர பொலிஸ் அதிகாரி அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போதுசந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!
நேற்றிரவு (22.04.25) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவிததுள்ளது நேற்றிரவு 9.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்இடம்பெற்றுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறுஉயிரிழந்துள்ளார்.
வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் வைத்து அவர் மீது துப்பாக்கிச் சூடுநடத்தப்பட்டுள்ளதாக காவற்துறை யினர் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு நபர் சிறு காயங்களுடன்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் கைத்துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர் எனத் தொிவித்துள்ள வெல்லம்பிட்டிய காவற்துறையினர் சம்பவம் தொடர்பில்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் பாப்பரசராகதெரிவு செய்யப்படலாம் – சர்வதேச ஊடகங்கள் எதிர்வுகூறல்!
இலங்கையின் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும் அடுத்த பாப்பரசராக தெரிவு செய்யப்படுவதற்கானவாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இடத்தை நிரப்பக்கூடியவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ள வொசிங்டன்எக்ஸாமினர் கர்தினால் மல்கம் ரஞ்சித்துடன் பிலிப்பைன்சின் கர்தினால் லூயிஸ் டக்லேஇ பிரான்சின் கர்தினால் ஜீன் மார்க்இத்தாலியின் கர்தினால் பியட்டிரோ பரோலின் ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளது. யுஎஸ் டுடேயும் மல்கம் ரஞ்சித்தின் பெயரை குறிப்பிட்டுள்ளது. யுஎஸ் டுடே கர்தினால் மட்டே சுப்பிஇ ஜேர்ஹாட் முல்லர்இ ரொபேர்ட் சராஇ ரேய்மண்ட பேர்க் ஆகியோரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை சர்வதேச கத்தோலிக்க செய்தி ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ள டைம்ஸ் ஒவ்இந்தியா மல்கம் ரஞ்சித் பெரிதும் அறியப்படாத ஆனால் எதிர்பாராத விதமாக வெற்றிபெறக்கூடிய பாப்பரசராக கூடியஒருவர் என தெரிவித்துள்ளது. மல்கம் ரஞ்சித்தின் பாரம்பரிய நிலைப்பாட்டை சுட்டிக்காட்டியுள்ள வொசிங்டன் டைம்ஸ் இலத்தீன் வழிபாட்டு முறைமற்றும் ஒருபாலின திருமணத்திற்கான எதிர்ப்பு ஆகியவற்றின் காரணமாக புதிய பாப்பரசரை தெரிவு செய்யவுள்ளகர்தினால்கள் மத்தியில் காணப்படும் பழமைவாத குரல் மல்கம் ரஞ்சித் என தெரிவித்துள்ளது.
அடுத்த பாப்பரசராக தெரிவு செய்யப்படக்கூடியவர் என எவரின் பெயரும் இன்னமும் குறிப்பிடப்படாத நிலையில்இ பலஊடகங்களில் மல்கம் ரஞ்சித்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை கத்தோலிக்க திருச்சபைக்குள் அவருக்குள்ளமதிப்பினையும் அங்கீகாரத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. ஐரோப்பியர் அல்லாத ஒருவர் தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் என்ற அபிப்பிராயம் அதிகரித்துள்ள நிலையில்கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் பெயர் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு சபாநாயகர்விடுத்துள்ள அறிவிப்பு!
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக விசாரணைகளைஆரம்பிப்பதற்காக நியமிக்கப்படவுள்ள குழுவிற்கு உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கு பெயர் ஒன்றைபரிந்துரை செய்யுமாறு சபாநாயகர்இ பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்துக்கு நிலையியல் கட்டளைகளின்படிஇ இந்தக் குழுவிற்கு ஒரு உறுப்பினரை நியமிப்பது பிரதமர்மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் இணக்கத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
குறித்த குழுவிற்கு மொத்தம் மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதில் ஒரு உறுப்பினர் பிரதமநீதியரசரால் நியமிக்கப்பட வேண்டும். மேலும்இ பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் இந்தக் குழுவின் நிரந்தரஉறுப்பினராக செயல்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் பல்வேறு உலகத் தலைவர்கள் கண்டனம்.
இந்நிலையில் அமெரிக்கா அதிபர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்காஇ ரஷ்யாஇ ஈரான்இ சவுதி அரேபியாஇ இத்தாலிஇ உள்ளிட்டநாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ட்ரம்ப் எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்இ காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்தி மிகவும்கவலையளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது.உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும்இ காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். பிரதமர் மோடிக்கும்இ இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும்இ ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு. எங்கள்இதயங்கள் உங்கள் அனைவருடனும் உள்ளன என பதிவிட்டுள்ளார்.
இது 'எந்த நியாயமும் இல்லாத ஒரு கொடூரமான குற்றம்.'இந்த மிருகத்தனமான குற்றத்திற்கு எந்த நியாயமும்இல்லை.'பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ரஷ்யாதொடர்ந்து வழங்கும் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வதற்கான இந்தியா முயற்சிகளில்அதன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில்இ ' குற்றவாளிகள் தகுந்த தண்டனையை எதிர்கொள்வார்கள் என்றுநாங்கள் எதிர்பார்க்கிறோம்' இறந்தவர்களின் நெருங்கிய மற்றும் அன்பானவர்களுக்கு உண்மையானஅனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவிக்கவும்இ காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்தனைசெய்வதாக புடின் கூறியுள்ளார்.