தொலைக்காட்சி , வானொலியை கைவிட்ட வேட்பாளர்கள்: சமூக வலைத்தளங்களுக்கு முக்கியத்துவமா?
.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பெரும்பாலான வேட்பாளர்கள் தேசியத் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனங்களில் தங்களுடைய கொள்கைகளை முன்னிலைப்படுத்த ஒளிபரப்பு நேரத்தை ஒதுக்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை என அறியக்கிடைத்துள்ளது.
தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தில் நேற்று வரையில் ஐந்து அல்லது ஆறு வேட்பாளர்கள் மாத்திரமே ஒளிபரப்பு நேரத்தை பெற்று தமது உரைகளை பதிவு செய்துள்ளனர்.
வேட்பாளர்கள் சிலர் ஒளிபரப்பு நேரம் அவசியமில்லை என கூறியுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ள 38 வேட்பாளர்களில் 15 பேர் மாத்திரமே பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அவ்வாறான வேட்பாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் முடியாமல் போயுள்ளதாக குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.