Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

புதிய முறையில் விசாரணைகள்? முன்னாள் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள அநுர!

.

கடந்த அரசாங்கங்களில் மந்தகதியில் விசாரிக்கப்பட்ட முன்னாள் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள், அரச உயர் அதிகாரிகள் தொடர்பான பல வழக்குகள் தொடர்பில் புதிய முறையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.குற்றப் புலனாய்வு திணைக்களம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உள்ளிட்ட விசேட பொலிஸ் பிரிவுகள் இது தொடர்பில் நடவடிக்கை தீர்மானித்துள்ளன. அதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் விசேட பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் இது தொடர்பான வழக்கு கோப்புகளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை தற்போது நீதிமன்றங்களில் இருந்து பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் பல அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பொது சொத்துக்களை அபகரித்ததாகவும், லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பான பல வழக்குகள் தற்போது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. சில விசாரணைகளை முடித்துவிட்டு சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக விசாரணை கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி பல வருடங்கள் கடந்துள்ளது.

இந்நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைக்கப்பெறாத பல வழக்குகள் உள்ளதாக நீதிமன்றில் தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டது. அவ் வழக்குகளுடன் தொடர்பான சந்தேகநபர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்காக சட்டமா அதிபருக்கு உடனடி அறிவுறுத்தல்களை வழங்குமாறு நீதிமன்றங்கள் சட்டமா அதிபருக்கு பல நினைவூட்டல்களை அனுப்பியுள்ளன.