Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

கனடாவில் சாலை விபத்தில் இந்தியர்கள் மூன்று பேர் பலி

,

கனடாவில் இரண்டு ட்ரக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று இந்தியர்கள் பலியாகியுள்ளார்கள்.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவரான நவ்ப்ரீத் சிங் நவி என்பவர், ஒரு ஆண்டுக்கு முன், வேலை தேடி கனடாவுக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவர் ட்ரக் ஒன்றின் சாரதியாக வேலை செய்துகொண்டிருந்திருக்கிறார்.

ஒன்ராறியோவுக்கு அருகே நவி ட்ரக்கில் சென்றுகொண்டிருக்கும்போது, அவரது ட்ரக், எதிரே வந்த மற்றொரு ட்ரக்குடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இரண்டு ட்ரக்குகளும் ஒன்றுடன் ஒன்று மோதியதில், நவியும், மற்ற ட்ரக்கில் இருந்த அர்ஷ்தீப் சிங்கும், அவருடன் பயணித்த மற்றொரு நபரும் என மூன்று பேரும் உயிரிழந்துள்ளார்கள்.

உயிரிழந்த அந்த மூன்றாவது நபர் முறைப்படி இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. மற்றும் அவருடன் பயணித்த மற்றொரு நபர் ஆகிய இருவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் இந்தியாவுக்குக் கொண்டு வர உதவுமாறு அவர்களுடைய குடும்பத்தினர் இந்திய அரசைக் கோரியுள்ளனர்.