Breaking News
சிறீதரன் எம்.பிக்கு அச்சுறுத்தல்: இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம்
.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாணத்திலுள்ள இல்லத்தின் முன்பாக இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தும் வகையிலான நடமாட்டம் (28) அவதானிக்கப்பட்டுள்ளது.
இலக்கத்தகடுகள் மறைக்கப்பட்ட நான்கு மோட்டார்சைக்கிள்களில் முகமூடிகள் அணிந்தவாறு வருகைதந்த இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனையும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தும் வகையிலான செயல் கண்காணிப்புக் கமராக்களில் பதிவாகியுள்ளன.