Breaking News
மே தின நிகழ்வில் கலந்துக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமிழில் உரையாற்றினார்.
மலையக மக்களுடன் இணைந்து தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி.
தமிழில் உரையாற்றிய சஜித்!
தலவாக்கலையில் இன்று (1) இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்துக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமிழில் உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து மக்களுக்கு தான் செய்யக்கூடிய வாக்குறுதியையும் தமிழில் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மலையக மக்களுடன் இணைந்து தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி. நான் இலங்கையில் உள்ள மலையக சமூகத்தை பாதுகாப்பேன். உங்கள் மொழி உரிமையை பாதுகாப்பேன், உங்களுக்கான நிலம், வீடு உரிமையை நான் வழங்குவேன், மலையக நகர, கிராமிய அபிவிருத்திக்கு நான் பொறுப்பு என தெரிவித்தார்.