Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவே முழுப்பொறுப்பேற்க வேண்டும்

ஏப்ரல் 10 ஆம் திகதி பிரேமதாச பிரதமராக பதவியேற்றிருந்தால் பிரச்சினை ஏதும் ஏற்பட்டிருக்காது

அனைத்து பிரச்சினைகளுக்கும் சஜித் தான் காரணம்

நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஏப்ரல் 10 ஆம் திகதி பிரேமதாச பிரதமராக பதவியேற்றிருந்தால் பிரச்சினை ஏதும் ஏற்பட்டிருக்காது என தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட அறிக்கை தொடர்பில் ஜனாதிபதியிடம் சில விளக்கங்களை கோரியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இந்த விவகாரங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவது நல்லது என்று நான் நினைக்கிறேன். இது குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன.

இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவர் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என நான் எதிர்க்கட்சித் தலைவிடம் கூற விரும்புகிறேன். ஏப்ரல் 10 ஆம் திகதி அவர் பிரதமராக பதவியேற்றிருந்தால், எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த பிரச்சினைகள் நான் என் திறனுக்கு ஏற்றவாறு இந்தப் பிரச்சினைகளைக் கையாண்டு செயல்படுகிறேன்,” என்று ஜனாதிபதி கூறினார்.