Breaking News
சர்வதேச அழகிப் போட்டியில் திலினி குமாரிக்கு முதலிடம்.
.
இந்தோனேசியாவில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச அழகிப் போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தைப் பெற்ற திலினி குமாரி நேற்று திங்கட்கிழமை (16) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
கண்டி, பிரிமத்தலாவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர், நடிகையாகவும், அறிவிப்பாளராகவும் பல துறைகளிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவின் பாலி தீவில் சுமார் 20 நாடுகளைச் சேர்ந்த அழகுராணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி , கடந்த 09ஆம் திகதி முதல் நேற்று (16) வரை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற திலினி, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.